Home Featured இந்தியா கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ்-பாஜக இழுபறி!

கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ்-பாஜக இழுபறி!

1174
0
SHARE
Ad

Goa

புதுடில்லி – உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் இரு மாநிலங்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவிருக்கும் பாஜக, கோவா மணிப்பூரில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

கோவா

#TamilSchoolmychoice

இந்தியாவின் முன்னணி சுற்றுலா மாநிலமான கோவா, சிறிய மாநிலமாக இருந்தாலும், உலகம் முழுக்க புகழ்பெற்ற மாநிலமாகும். அதன் அழகிய கடற்கரைகள், போர்ச்சுகீசிய பாணியிலான கட்டிடக் கலைகள், கலாச்சாரச் சுவடுகள், நவநாகரிக பண்பாட்டு முகங்கள் அனைத்தும் இந்தியர்களை மட்டுமின்றி, உலகம் முழுமையிலும் இருந்து குவியும் சுற்றுலாப் பயணிகளையும் அதிகம் ஈர்த்து வருகின்றது.

கோவாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அங்கு எந்தக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

காங்கிரஸ் 17 தொகுதிகளில் வென்றுள்ள நிலையில் அதற்கு அடுத்த நிலையில் 13 தொகுதிகளை பாஜக வென்றுள்ளது. மற்ற கட்சிகள் 10 தொகுதிகளை வென்றுள்ளன. ஆம் ஆத்மி கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 20 தொகுதிகள் தேவை. ஆனால், 17 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்குமா, அல்லது பாஜக மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்குமா என்ற இழுபறி நிலை கோவா அரசியலை தற்போது ஆக்கிரமித்துள்ளது.

மணிப்பூர்

manipur-imphal-மணிப்பூர் மாநிலத்தில் 25 தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கும் நிலையில் பாஜக 21 தொகுதிகளை வென்றிருக்கிறது.

மற்ற கட்சிகள் 7 தொகுதிகளை வென்றிருக்கின்றன. என்பிஎஃப் (NPF) என்ற கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 30 தொகுதிகளை இதுவரை எந்தக் கட்சியும் நெருங்கவில்லை.

-செல்லியல் தொகுப்பு