Home One Line P1 சபாவிலும் சளிக்காய்ச்சல் தொற்று நோய் பதிவு, ஸ்டெல்லா மாரிஸ் பள்ளி மூடப்பட்டது!

சபாவிலும் சளிக்காய்ச்சல் தொற்று நோய் பதிவு, ஸ்டெல்லா மாரிஸ் பள்ளி மூடப்பட்டது!

720
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: ஏழு மாணவர்களுக்குஏ’ வகை சளிக்காய்ச்சல் (இன்ப்ளூயன்சா ஏ) அல்லது எச்1என்1 இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, ஸ்டெல்லா மாரிஸ் தேசிய பள்ளி இங்கு மூடப்பட்டுள்ளது.

கோத்தா கினபாலு சுகாதார அலுவலகம் இந்த பள்ளியை மூட உத்தரவிட்ட அறிவிப்பு வெளியானதாக சபா மாநில சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய அமைச்சர் டத்தோ பிரான்கி பூன் மிங் புங் கூறினார்.

சபா மாநில சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணிக்கும்என்று நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நாளை (இன்று புதன்கிழமை) தொடங்கி ஏழு நாட்களுக்கு அப்பள்ளி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், அனைத்து தரப்புகளும், குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதில் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என்று மாநில முதலமைச்சர் முகமட் ஷாபி கூறினார்.

அரசாங்கத்தின் மூலம், தொற்று நோயின் அறிகுறிகள் கட்டுப்படுத்தப்படுவதையும், அது பரவாமல் தடுக்கவும் கையாளப்படுவதை உறுதிசெய்ய சுகாதார அலுவலகம் செயல்படும் என்று அவர் கூறினார்.