மிராபெல் – கனடாவின் கியூபெக் நகரத்தைச் சேர்ந்த கிளாடி டூபெரில் என்ற பெண், வழக்கமாக வீடு கட்டும் பாணியிலிருந்து முற்றிலும் மாற்றி வித்தியாசமான வீடு ஒன்றைக் கட்டிக் கொள்ளத் திட்டமிட்டார்.
அதன் படி, பொறியியல் நிறுவனம் ஒன்றை அணுகி, வீட்டுக்குத் தேவைப்படும் அளவில் கண்டெயினர் (கலன்களை) வாங்கினார். அதன் பின்னர் கட்டுமான நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஒரே நாளில் அந்த கலன்கள் வீட்டிற்குத் தேவையான வடிவமைப்பிற்குக் கொண்டு வரப்பட்டன.
பின்னர், பைன் வுட் (Pinewood) என்றழைக்கப்படும் மரப்பலகைகள் மூலம் அக்கலன்கள் அலங்கரிக்கப்பட்டன. இவ்வீட்டைக் கட்டி முடிக்க மிகக் குறைவான நாட்களே எடுத்துக் கொண்டது என்றாலும், வீட்டின் உட்புறத்தில் வித்தியாசமான வகையில் வடிவமைக்க கூடுதலாக சில நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது.
கலைநயத்தோடு கட்டிமுடிக்கப்பட்ட வீட்டின் அழகை இப்படத்தொகுப்பின் மூலம் கண்டு ரசிக்கலாம்:-
தகவல், படங்கள் – BRIGHT SIDE