Home Featured நாடு குடிநுழைவு அதிகாரி உட்பட ஐஎஸ் தொடர்புடைய 7 பேர் கைது!

குடிநுழைவு அதிகாரி உட்பட ஐஎஸ் தொடர்புடைய 7 பேர் கைது!

802
0
SHARE
Ad

bukit-amanகோலாலம்பூர் – குடிநுழைவு அதிகாரி உட்பட ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேர், சபா மாநிலம், கோலாலம்பூர் விமான நிலையம் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த வாரம் புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஐஎஸ் உடன் தொடர்புடைய ஒருவருக்கு, குடிநுழைவு இலாகாவில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், சபா வரைக்கும் எந்த ஒரு முறையான அனுமதியும் இன்றி செல்வதற்கு உதவி செய்திருக்கிறார். அந்நபர் சபாவில் இருந்து பிலிப்பைன்ஸ் செல்ல இருந்தார் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும், மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அனுமதி பெற்றிருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.