கோலாலம்பூர் – உறவினர்களிடமிருந்து மரபணு மாதிரி கிடைக்காமல் இருந்த நிலையில், இறந்தவர் கிம் ஜோங் நம் தான் என்பதை மலேசியா உறுதிப்படுத்தியது எப்படி? என்ற கேள்விக்கான பதில் தற்போது வெளிவந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஜப்பான், மலேசியாவிற்கு உதவி செய்திருக்கிறது. ஏற்கனவே கடந்த 2001-ம் ஆண்டு, நரிட்டா அனைத்துலக விமான நிலையத்தில், ஜோங் நம்மை கைது செய்த போது எடுக்கப்பட்ட விரல் ரேகைப் பதிவுகளை, ஜப்பான், மலேசியாவிடம் அளித்ததாக, அந்நாட்டின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அதனை இறந்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்த மலேசியா, அது கிம் ஜோங் நம் தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஜப்பானில் போலிக் கடப்பிதழைப் பயன்படுத்தி நுழைய முயற்சி செய்ததற்காக கிம் ஜோங் நம், கைது செய்யப்பட்டார்.
டோக்கியோவில் இருக்கும் டிஷ்னிலேண்டைப் பார்வையிட வந்ததாக ஜோங் நம் அதிகாரிகளிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.