சியோல் – வரும் மே 9-ம் தேதி, தென்கொரியாவில் அதிபர் தேர்தல் நடைபெறும் என தேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகின்றது.
கடந்த வாரம், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தென்கொரியாவின் முதல் பெண் அதிபரான பார்க் கியென் ஹை, அரசியல் சாசன நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டதையடுத்து, அப்பதவிக்கு புதிதாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் பார்க் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து, தென்கொரிய பிரதமர் வாங் கியோ ஆன், அதிபராகவும் தற்காலிகமாகப் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், மே மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என வாங் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.