Home Featured தமிழ் நாடு ஆர்கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன்!

ஆர்கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன்!

1148
0
SHARE
Ad

TTV Thinakaranசென்னை – ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலாவின் ஒப்புதலோடு, கட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி தான் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.

மேலும், 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவேன் என்று தினகரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மறைவையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே.நகர் சட்டமன்றத்திற்கு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக மருதுகணேஷ் என்ற வழக்கறிஞர் இன்று அக்கட்சியினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.