Home Featured நாடு கிம் உடலை ஒப்படைத்து 9 மலேசியர்களை மீட்க புத்ராஜெயா திட்டமா?

கிம் உடலை ஒப்படைத்து 9 மலேசியர்களை மீட்க புத்ராஜெயா திட்டமா?

671
0
SHARE
Ad

zahidhamidicitizen1606கோலாலம்பூர் – மலேசியாவில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் கிங் ஜோங் நம் சடலத்தை வடகொரியாவிடம் கொடுத்து, அங்கு சிக்கியுள்ள 9 மலேசியர்களை மீட்டுக் கொள்ள மலேசிய அரசாங்கம் யோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி கூறுகையில், “அங்கிருக்கும் 9 மலேசியர்களை மீட்க புத்ராஜெயா எல்லா வழிகளையும் யோசித்து வருகின்றது” என்று தெரிவித்திருப்பதாக ‘தி ஸ்டார்’ கூறுகின்றது.

மேலும், இது குறித்து மலேசிய அரசு, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice