Home Featured நாடு ‘அந்த’ படங்கள் பார்ப்பதில் 7 வது இடத்தில் மலேசியப் பெண்கள் – ஆய்வு தகவல்!

‘அந்த’ படங்கள் பார்ப்பதில் 7 வது இடத்தில் மலேசியப் பெண்கள் – ஆய்வு தகவல்!

859
0
SHARE
Ad

smartphonesகோலாலம்பூர் – திறன்பேசிகளின் மூலம் ஆபாசப் படங்களைப் பார்ப்பதில், மலேசியப் பெண்கள், உலக அளவில் 7-வது இடத்தில் இருப்பதாக ஃபார்ன்ஹப் (Pornhub) என்ற இணையதளம் கூறுகின்றது.

ஃபார்ன்ஹப் என்ற அந்த இணையப்பக்கத்தை திறன்பேசிகளின் வழியாக 84% மலேசியப் பெண்கள் பார்வையிடுவதாகவும், கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்ட அந்த ஆய்வு கூறுகின்றது.

இதனிடையே, இந்த முறையில் ஆபாசப் படங்கள் பார்க்கும் மலேசிய ஆண்கள் 66 % தான் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், திறன்பேசிகளின் மூலமாக ஆபாசப்படங்கள் பார்ப்பதில் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் முறையே முதல் மூன்று இடங்களில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட அந்த ஃபார்ன்ஹப் இணையப் பக்கம் மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.