Home Featured தமிழ் நாடு ஓபிஎஸ் அணி வேட்பாளராக ஆர்.கே.நகரில் மதுசூதனன்!

ஓபிஎஸ் அணி வேட்பாளராக ஆர்.கே.நகரில் மதுசூதனன்!

762
0
SHARE
Ad

madhusoothanan-admk-2சென்னை – எதிர்வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் அணியினரின் சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அ.தி.மு.க.சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்கள் அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிடுவதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

1991-ல் ஏற்கனவே ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக மதுசூதனன் அதிமுகவில் பொறுப்பு வகித்துள்ளார். அதிமுகவின் அவைத் தலைவராகவும் இருந்த அவர் சசிகலா அணியினரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

madhusoothanan-admk-rk nagar-candidateமதுசூதனனை வேட்பாளராக அறிவிக்கும் ஓ.பன்னீர் செல்வம்….