Home Featured நாடு கிம் ஜோங் நம் மகனிடமிருந்து மரபணு மாதிரி பெறப்பட்டது – சாஹிட் தகவல்!

கிம் ஜோங் நம் மகனிடமிருந்து மரபணு மாதிரி பெறப்பட்டது – சாஹிட் தகவல்!

840
0
SHARE
Ad

KimJongNamகோலாலம்பூர் – இறந்தது கிம் ஜோங் நம் தான் என்பதை உறுதிப்படுத்த, அவரது மகனிடமிருந்து மரபணு மாதிரி பெறப்பட்டதாக துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.

கிம் ஜோங் நம் மகன் இருந்த இடத்தைத் தேடிச் சென்ற மலேசிய அதிகாரிகள் அவரிமிருந்து மரபணு மாதிரியைப் பெற்றதாகத் தெரிவித்தார்.

எனினும், கிம் ஜோங் நம் மகனை எந்த இடத்தில் மலேசிய அதிகாரிகள் சந்தித்தனர் என்பதைக் குறிப்பிட சாஹிட் மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice