Home Featured நாடு ஜோங் நம் கொலை: 4 பேரைப் பிடிக்க இண்டர்போல் அனுமதி பெற்றது மலேசியா!

ஜோங் நம் கொலை: 4 பேரைப் பிடிக்க இண்டர்போல் அனுமதி பெற்றது மலேசியா!

1116
0
SHARE
Ad

Khalid Abu Bakarபுத்ராஜெயா – கிம் ஜோங் நம் கொலையில் தொடர்புடையதாக நம்பப்படும் 4 பேரைக் கைது செய்ய இண்டர்போலிடமிருந்து சிவப்பு அறிக்கையை பெற்றிருக்கிறது மலேசிய அரசு.

இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “சம்பவம் நடக்கும் போது விமான நிலையத்தில் இருந்த 4 வடகொரிய நாட்டவர்களைக் கைது செய்ய சிவப்பு அறிக்கை பெற்றிருக்கிறோம். அவர்கள் 4 பேரும் பியோங்யாங்கிற்கு சென்றுவிட்டார்கள் என நம்புகிறோம். அவர்களை இண்டர்போலின் உதவியுடன் பிடிக்கவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.