Home Featured நாடு ரவாங்கில் 7 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கினர் – 2 உடல்கள் மீட்பு!

ரவாங்கில் 7 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கினர் – 2 உடல்கள் மீட்பு!

861
0
SHARE
Ad

Bukit Beruntungரவாங் – ரவாங் புக்கிட் பெருந்தோங்கில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, அங்கிருந்த ஆறு ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 முதல் 13 வயதிற்குட்பட்ட 8 சிறுவர்கள், திடீர் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒரு சிறுவன் அங்கிருந்த பாலத்தின் தூண் ஒன்றைப் பிடித்த படி, உயிருக்குப் போராடிய நிலையில், அந்த வழியாகச் சென்ற வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர், அவரைக் காப்பாற்றியிருக்கிறார்.

இந்நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 சிறுவர்களில் இருவரின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய 5 பேரைத் தேடும் பணியில் சிலாங்கூர் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice