Home Featured தொழில் நுட்பம் குரோம், ஜி-மெயில், இன்பாக்சு அனைத்திலும் அதே வழு!

குரோம், ஜி-மெயில், இன்பாக்சு அனைத்திலும் அதே வழு!

906
0
SHARE
Ad

Google-Chrome-குரோம், ஜி-மெயில், இன்பாக்சு செயலிகள் அனைத்திலும் தமிழில் எழுத சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டிராய்டில் மட்டும் அல்லாமல், மெக் கணினிகளிலும் இது காணப்படுகின்றது.

அண்மையில் பதிவு செய்யப்பட்டக் கட்டுரையில், ஆண்டிராய்டின் ஜி-மெயில் செயலியில் தமிழில் எழுதும்போது ஏற்படும் சிக்கல் குறித்து எழுதியிருந்தோம். இந்தப் பதிவைத் தொடர்ந்து, இதே சிக்கல் மற்ற செயலிகளிலும் தென்படுகின்றது என்பதை, பல பயனர்கள் தெரிவித்தனர். ஆண்டிராய்டு இயங்குதளங்களில் மட்டுமல்லாது, ஆப்பிள் மெக்கிண்டாசுக் கணினிகளிலும் குரோம் உலாவியைப் பயன்படுத்தும் போது இதே சிக்கல் ஏற்படுவதையும் அறிந்தோம். ஆப்பிளின் ஐபோனிலும் ஐபேட்டிலும் இந்தச் சிக்கல் ஏற்படவில்லை.sellinam-chrome-bug-tamil-

இது குறித்து முகநூலில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் கூகுளின் ‘குரோமியம்’ தொகுப்பைப் பயன்படுத்தும் செயலிகள் அனைத்திலும் இந்தச் சிக்கல் இருப்பதாக நுட்பவியல் சார்ந்த நண்பர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

குரோம் வழு அறிக்கை

இந்தச் சிக்கலை ஏற்படுத்தும் வழு குறித்து, குரோமின் மேம்பாட்டு குழுமத்தில் இன்று ஒரு வழு அறிக்கையை இங்கே பதிவு செய்துள்ளோம். தெளிவான விளக்கங்களோடு, இதை மற்றவர்களும் காண்பதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளோம்.

இதே சிக்கலை எதிர்நோக்கும் மற்ற பயனர்கள், புதிதாக வழு அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டியதில்லை. இது குறித்த கூடுதலான விவரங்கள் இருப்பின் அவற்றை அதே பக்கத்தில் சேர்க்கலாம். அல்லது, உங்களுக்கும் இதே சிக்கல் உள்ளது என்பதை பக்கத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் வின்மீன்களைச் சொடுக்கித் தெரிவிக்கலாம்.

இந்த வழு விரைவில் நீக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்போம்!

நன்றி – செல்லினம்