Home Featured கலையுலகம் “அவரது கனவுகளில் பாதியைக் கூட நிறைவேற்றவில்லை” கமலஹாசன் உருக்கம்!

“அவரது கனவுகளில் பாதியைக் கூட நிறைவேற்றவில்லை” கமலஹாசன் உருக்கம்!

846
0
SHARE
Ad

சென்னை – இலண்டனில் தனது மூத்த சகோதரர் சந்திரஹாசன் மறைந்தது குறித்து கமலஹாசன் தனது பிரிவையும், உருக்கத்தையும், டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு வழக்கறிஞரான சந்திரஹாசன், கமல், மூத்த சகோதரர் சாருஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து சினிமாவில் நுழைந்து ஓரிரு படங்களில் நடித்தார். பின்னர் கமலஹாசனின் ராஜ்கமல் பட விவகாரங்களிலும், படத் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு, தனது சகோதரருக்கு மிகவும் உதவியாகச் செயல்பட்டார்.

இவரது மகள் அனுஹாசன், ‘காஃபி வித் அனு’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தியதோடு, சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

#TamilSchoolmychoice

chandrahasan-kamalகமலுடன் சந்திரஹாசன் – கோப்புப் படம்…

கமல், விஸ்வரூபம் பட விவகாரத்தில் சிக்கல்களைச் சந்தித்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவரும், சட்ட விவகாரங்களைக் கவனித்ததோடு, பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவரும் சந்திரஹாசன்தான்.

தனது சகோதரரின் மறைவு குறித்து கமலஹாசன் பின்வருமாறு டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்:

“நண்பனாய், நல்லாசானாய், தமயனும், தகப்பனுமாய் அவரைப் பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை”