Home Featured தமிழ் நாடு சசி தரப்புக்கு ஆட்டோவுக்குப் பதிலாக ‘தொப்பி’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சசி தரப்புக்கு ஆட்டோவுக்குப் பதிலாக ‘தொப்பி’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

735
0
SHARE
Ad

Sasikalaசென்னை – வரும் ஏப்ரல் 12-ம் தேதி, நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா தரப்புக்கு முதலில் ஆட்டோ சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம், தற்போது தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது.

தங்களுக்கு ஆட்டோ சின்னம் வேண்டாம், தொப்பி சின்னம் தான் வேண்டும் என்று சசிகலா தரப்பு, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டதால், தற்போது தொப்பி சின்னம் வழங்கியிருக்கும் தேர்தல் ஆணையம், அதிமுக அம்மா அணி என்ற கட்சிப் பெயருக்கும் அனுமதி வழங்கியிருப்பதாக தமிழக தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.