Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

1096
0
SHARE
Ad

vijayakanth_new 3.2சென்னை – தேமுதிக தலைவர் விஜயகாந்த், மியாட் மருத்துவமனையில் இன்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்வது வழக்கம் என்றும், அதன் படி, இன்று அவர் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தேமுதிக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதனிடையே, அவர் திடீர் உடல்நலக்குறைவினால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று நட்பு ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டதால், தேமுதிக கட்சியினர் கவலையடைந்தனர்.

இதனையடுத்து, தேமுதிக கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.