Home Featured நாடு இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் கால் பதிக்க வேண்டும் – சிவராஜா வலியுறுத்து!

இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் கால் பதிக்க வேண்டும் – சிவராஜா வலியுறுத்து!

963
0
SHARE
Ad

Sivarajaகோலாலம்பூர் – இளைஞர்கள் தங்கள் நேரத்தை பயனான வழியில் முதலீடு செய்ய விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டியது அவசியமான ஒன்று என ம.இ.காவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி. சிவராஜா, “யாஷாஸ்” நல்லெண்ண போவ்லிங் போட்டியைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

தொழில்நுட்ப உலகத்தில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களைத் தட்டி எழுப்பும் வேலையில், ம.இ.காவின் இளைஞர் பகுதி கல்வி, பொருளாதாராம், சமூகம், விளையாட்டு என பல்நோக்கு சிந்தனையில் இளைஞர்களை ஈடுபடுத்தி வருகிறது. அவர்களின் நாட்டம் அறிந்து, தேவை அறிந்து பல வகையில் உதவிக்கரம் நீட்டியும் வருகிறது.

Pon Kogilamஇன்றைய இளைஞர்கள் நாளையத் தலைவர்கள் என்பது முதுமொழி. ஆனால், இன்றைய இளைஞர்கள் நாளை வரைக் காத்திருப்பதில்லை. இன்றே தலைமைத்துவ தகுதியை வளர்த்துக் கொண்டு செயல்பட தொடங்குகிறார்கள். நாளை என்பது அவர்களுக்கு வெறும் கனவாகவே இருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும் பேசிய சிவராஜா, யாஷாஸ் போன்ற இந்திய விளையாட்டு அமைப்புகள் தொடர்ந்து இது போன்று பல போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்ய வேண்டும் என அதன் தலைவர் பொன் கோகிலத்திடம் வழியுறுத்தினார். இது போன்ற விளையாட்டுப் போட்டிகளினால், இளைஞர்களிடையே ஒற்றுமை மேம்படுவது மட்டுமல்லாமல்,  ஆரோக்கியமான சமுதாயமாகவும் நம்மால் உருவாக முடியும் என அவர் குறிப்பிட்டார்.