புதுடில்லி – ஒவ்வொரு மாத இறுதியிலும் நாட்டு மக்களுக்கு ‘மான் கி பாத்’ என்ற தலைப்பில் வானொலி உரையை வழங்கி வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய உரையில் இந்தியாவில் இனி பிரசவ கால விடுமுறை 26 வாரங்களாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
தற்போது, அதிகாரபூர்வ பிரசவகால விடுமுறை 12 வாரமாக இருந்து வருகிறது.
புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில், எதிர்கால இந்தியக் குடிமக்களாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்ப கட்டத்திலேயே, பிறந்தவுடனேயே போதிய கவனத்தை தாய்மார்கள் அவர்கள் மீது செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தக் கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதாகவும் மோடி அறிவித்தார்.