Home Featured நாடு அபு சயாப் பிடியில் இருந்து மேலும் 3 மலேசியர்கள் மீட்பு!

அபு சயாப் பிடியில் இருந்து மேலும் 3 மலேசியர்கள் மீட்பு!

763
0
SHARE
Ad

abu-sayapகோத்தா கினபாலு – அபு சயாப் தீவிரவாத இயக்கம் பிணைபிடித்து வைத்திருந்த 5 மலேசியர்களில் கடந்த வாரம் 2 பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 பேரை பிலிப்பைன்ஸ் கடற்படை மீட்டது.

தற்போது மொகமட் ரிட்சுவான் இஸ்மாயில் (வயது 32), ஃபாண்டி பாக்ரான் (வயது 26), மொகமட் சுமாடி ரஹிம் (வயது 23) என்ற அந்த மூன்று மலேசியர்களும் பிலிப்பைன்ஸ் கடற்படையின் பாதுகாப்பில் வைப்பட்டிருப்பதாக கிழக்கு சபா பாதுகாப்பு கமாண்டர் டத்தோ வான் பரி பரி வான் அப்துல் காலிட் அறிவித்திருக்கிறார்.