Home Featured தமிழ் நாடு நான் ஜெயலலிதாவைக் காதலித்தேன் – மனம் திறந்த முன்னாள் நீதிபதி!

நான் ஜெயலலிதாவைக் காதலித்தேன் – மனம் திறந்த முன்னாள் நீதிபதி!

645
0
SHARE
Ad

NEWSசென்னை – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்கண்டேய கட்ஜு, ஜல்லிக்கட்டு விவகாரம், ஜெயலலிதா மரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையான கருத்துகளைத் தெரிவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை அவர் தனது பேஸ்புக்கில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி குறிப்பிட்டிருக்கும் ஒரு பதிவு பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

தனது இளமைக் காலத்தில் ஜெயலலிதா மீது தனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்ததாகவும், அவரை ஒரு தலையாகக் காதலித்ததாகவும் மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“நான் இளம் வயதாக இருந்த போது, ஜெயலலிதா மீது ஈர்ப்பு இருந்தது. மிகவும் அழகாக இருந்தார். ஆமாம் அவர் மீது ஒரு தலை காதல் வைத்திருந்தேன். அது அவருக்குத் தெரியாது. அவர் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தார். நான் 1946-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தேன். கடந்த 2004-ம் ஆண்டு, நான் மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சென்னை ராஜ்பவனில் பதவிப் பிரமாணம் ஏற்ற போது தான் அவரை (ஜெயலலிதாவை) முதன் முறையாகச் சந்தித்தேன். அப்போது அவர் முதலமைச்சராக இருந்தார். அப்போது கூட அவர் அழகாக இருந்தார். ஆனால் நான் எனது இளமைக் காலத்தில் அவர் மீது கொண்டிருந்த உணர்வுகள் குறித்து கூறவில்லை. அது முறையாக இருக்காது” என்று மார்கண்டேய கட்ஜு தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பார்வை ஒன்றே போதுமே என்ற பாடலின் யுடியூப் இணைப்பையும் மார்கண்டேய கட்ஜு தனது பதிவிற்குக் கீழே இணைத்திருக்கிறார்.