Home Featured இந்தியா விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் ஒன்று கூடும் இளைஞர்கள் – போலீஸ் குவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் ஒன்று கூடும் இளைஞர்கள் – போலீஸ் குவிப்பு

754
0
SHARE
Ad

Farmer protestசென்னை – டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில், இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக நட்பு ஊடகங்களில் பரவிய தகவலையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மெரினாவில் பாதுகாப்பில் இருக்கும் காவல்துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு உள்ள கடைகளை அடைக்குமாறு, சிறு வர்த்தகர்களுக்கு உத்தரவிட்டிருக்கின்றனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் சோகத்தின் பிடியில் சிக்கி மாரடைப்பு ஏற்பட்டும் இறந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு, நிவாரண நிதி வழங்குமாறும், கடந்த 15 நாட்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.