Home Featured நாடு ஜோங் நம் உடல் பொது மருத்துவமனையில் தான் உள்ளது: டாக்டர் சுப்ரா

ஜோங் நம் உடல் பொது மருத்துவமனையில் தான் உள்ளது: டாக்டர் சுப்ரா

686
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTபுத்ராஜெயா – கிம் ஜோங் நம்மின் உடல் வடகொரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் தகவலை மறுத்த சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், அவரது உடல் இன்னும் கோலாலம்பூர் மருத்துவமனையில் தான் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் டாக்டர் சுப்ரா பேசுகையில், “அவரது உடல் இன்னும் கோலாலம்பூர் மருத்துவமனையின் பிணவறையில் தான் வைக்கப்பட்டிருக்கிறது. புதிய உத்தரவுகள் வரும் வரை அது அமைச்சின் பாதுகாப்பின் கீழ் அங்கே வைக்கப்பட்டிருக்கும். இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சும், பிரதமர் துறையும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றார்கள். முழுமையான தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் (சுகாதாரத்துறை) உடலைப் பாதுகாத்து வைத்திருப்போம்” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

மேலும், உடல் கெடாமல் இருக்க, இரண்டாவது முறையாக அது பதப்படுத்தப்படுமா? என்பதை தடவியல் துறை தான் முடிவு செய்யும் என்றும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.