Home Featured வணிகம் அஸ்ட்ரோ தொடர் வளர்ச்சி: முடிவுற்ற நிதியாண்டின் சிறப்பு முடிவுகள் வெளியீடு!

அஸ்ட்ரோ தொடர் வளர்ச்சி: முடிவுற்ற நிதியாண்டின் சிறப்பு முடிவுகள் வெளியீடு!

907
0
SHARE
Ad

Astroகோலாலம்பூர் – அஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின், 31 ஜனவரி 2017-இல் முடிவுற்ற நிதியாண்டின் சிறப்பு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன் படி, அஸ்ட்ரோ வெளியிட்டிருக்கும் பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சவால்மிக்க பங்குச் சந்தையில் மின் வணிகம் (e-commerce)  மற்றும் எடெக்ஸ் (Adex) வருடமொன்றிற்கான வருவாய் மற்றும் வரிக்கு பிந்திய இலாபம் (PATAMI) மிதமான வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளது. வருவாய் உயர்வு 2%, 5.6 பில்லியன் ரிங்கிட் வரிக்கு பிந்திய இலாபம் (PATAMI)  உயர்வு 1%, 624 மில்லியன் ரிங்கிட், விளையாட்டு உள்ளடக்கங்களின் முதலீடு மற்றும் நாணய மதிப்பிறக்கம் உள்ளடக்க செலவுகளின் விளைவால் வரிக்கு முந்தைய இலாபம் (EBITDA) 6% குறைந்து 1.8 பில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டியிருக்கிறது.

#TamilSchoolmychoice

வலுவான பணப்புழக்கம் (FCF) 1.3 பில்லியன் ரிங்கிட் நான்காவது இடைக்கால இலாப ஈவு பங்குக்கு 3 சென் வீதம், இறுதி இலாப ஈவு பங்குக்கு 0.5 சென் ஆகும். இலவச செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவையான ‘என்ஜோய்’ உந்துதலின் வாயிலாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியனாகப் அதிகரித்திருக்கிறது.

6% உயர்ந்து மொத்தம் 5.1 மில்லியன் வாடிக்கையாளர்களில் 3.5 மில்லியன் கட்டண தொலைக்காட்சி மற்றும் ‘என்ஜோய்’ 30% உயர்ந்து 1.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளது.

‘ஆர்பு’ (ARPU) ஒரு வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கப்பெறும் வருவாய் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து 100.4 ரிங்கிட்டாகப் பதிவு செய்துள்ளது.

ஸ்டார் ஹப் கேபில் விஷன் லிமிடட் (StarHub Cable Vision Ltd) உடன் இணைந்து சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்ட சீன மொழியில் ‘கோ ஷோப்’ அலைவரிசை அஸ்ட்ரோவின் இணைய வியாபாரமான ‘கோ ஷோப்’ (Go Shop) மேலும் விரிவடைந்து அதிகமானோரைச் சென்றடைந்துள்ளது. வருவாய் 38% உயர்ந்து 261 மில்லியன் ரிங்கிட்டை ஈட்டியுள்ளது. 912 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்குப் 1.5 மில்லியன் பொருட்கள் விற்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் என அனைத்து தளங்களிலும் அஸ்ட்ரோவின் வலுவான அடைவு ‘எடெக்ஸ்’ வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது.

‘எடெக்ஸ்’ 10% உயர்ந்து 705 மில்லியன் ரிங்கிட்டாக வருமானத்தை ஈட்டியுள்ள வேளையில் டிஜிட்டல் ‘எடெக்ஸ்’ 15% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
‘டிவி எடெக்ஸ்’ மற்றும் ‘ரெடெக்ஸ்’ பங்கு முறையே 38% மற்றும் 73% அதிகரித்துள்ளன.

அஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைவர் துன் சாக்கி அஸ்மி கூறுகையில், “அஸ்ட்ரோ சவால்மிக்க இன்றைய பங்குச் சந்தையில் தொடர்ந்து நிலைத்து இருக்க பங்குதாரர் குழுவினர்களுக்குத் தொடர்ச்சியான இலாப ஈவை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இலாபம் ஈட்டும் வியாபாரத் திட்டத்தை முறையாகத் தொடர்ந்து கையாளப்படும். இதன் வழி, நான்காவது இடைக்கால இலாப ஈவு பங்குக்கு 3 சென் வீதம் ஆகும் என்பதை இயக்குநர் வாரியம் பெருமனதுடன் அறிவிக்கின்றது. ஆகவே, இறுதி கட்ட இலாப ஈவு பங்குக்கு 0.50 சென் வீதம் ஆகும்” என்று தெரிவித்தார்.

அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரோஹானா ரோஷன் கூறுகையில்,“புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள வேளையில், நாங்கள் பங்குச் சந்தையில் எங்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக விளங்க தொடர்ந்து செயல்படவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் சமுதாயம்

“தற்போது எங்களின் தொலைக்காட்சி சேவை மலேசியாவிலுள்ள 71% குடும்பங்களில் ஊடுருவியுள்ளது. 5.1 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அஸ்ட்ரோ சுமார் 21 மில்லியன் பேருக்கு இச்சேவை வழங்கி வருகின்றது. அதை வேளையில், எங்களின் வானொலி வாராந்திர 15.6 மில்லியன் இரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும், எங்களின் டிஜிட்டல் அகப்பக்கங்களை ஒவ்வொரு மாதமும் சுமார் 5.8 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுக் களிக்கின்றார்கள்.  இதைத் தவிர்த்து, கடந்த ஆண்டு மட்டுமே 350 க்கும் மேற்பட்ட  நிகழ்வுகளை நடத்தி 500, 000 பேரை கவர்ந்துள்ளோம். இதன் வழி, மலேசியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிடித்தமான நம்பகமான எங்களின் சேவை தொடர்ந்து நிலைத்து இருக்க வழிவகுக்கின்றது”.

எங்களின் உள்ளடக்கஙகள்

தொலைக்காட்சி பார்ப்பவர்களின் பங்கு 77% சதவிதத்தை எட்டியுள்ள வேளையில் சராசரி 13.9 மில்லியன் நேயர்கள் தினந்தோறும் 4 மணி நேரம் அஸ்ட்ரோவின் உள்ளடக்கங்களைக் கண்டுக் களிக்கின்றனர். 70-க்கும் மேற்பட்ட எங்களின் பன்மொழி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் வரை எட்டியுள்ளது. அந்த வகையில், எதிர்வரும் காலங்களில் தரமான உள்ளடக்கங்களைத் தயாரிக்க எங்களின் வருடாந்திர செலவுகளிலிருந்து குறைந்தது 50% செலவிட குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். ஆகவே, வாடிக்கையாளர்களுக்கு அஸ்ட்ரோ தயாரிப்பிலான மிகச் சிறந்த உள்ளடக்கங்கள், அனைத்துலக ரீதியான பிரத்தியோக நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி ஒளிபரப்பு விளையாட்டு உள்ளடக்கங்களை வழங்குவதில் கவனம் கொள்வோம்”.

எங்களின் வாடிக்கையாளர்களின் அனுபவம்

இணைக்கப் பெட்டி மற்றும் ஆன் டிமாண்ட் சேவையும் வழங்கி வருகிறோம். தற்போது ‘பிவிஆர்’ இணைக்கப் பெட்டியின் சேவை 507,000 மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வேளையில் இவ்வாண்டு இறுதிக்குள் 1 மில்லியன் வாடிக்கையாளர்களை எதிர்பார்க்கிறோம். ஆன் டிமாண்ட் சேவையின் வாயிலாக எங்களின் வாடிக்கையாளர்கள் அண்மையில் வெளிவந்த நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம். இன்னும் 3 மாதங்களில் புகழ்பெற்ற படைப்புகளான (La La Land, Lion, Hell or High Water, Game of Thrones, Big Little Lies, The Young Pope, The Walking Dead) உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் கண்டு களிக்கலாம். பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் எங்களின் ‘GO’ சேவையை அஸ்ட்ரோ மற்றும் என்ஜோய் ஆகியவற்றிக்கு விரிவுப்படுத்தியுள்ளோம். அவ்வகையில் எங்களின் அஸ்ட்ரோ கோ தற்போது ஐஓஎஸ் (iOS) மற்றும் அண்டிரோய்டு (Android) பல்வகை உள்ளடக்கங்களை வழங்குகின்றது.  அஸ்ட்ரோ கோ செயலியை 1.1 மில்லியன் பேர் பதிவிறக்க செய்து வாராந்திர நாட்களில் சராசரி 3 மணி நேரம் எங்களின் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றார்கள்.

டிஜிட்டல் வாழ்க்கை முறையைத் துரிதப்படுத்துதல்

அதிகமான வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வாழ்க்கை முறையை அணுக்குகின்றார்கள். அவ்வகையில், பெரும்பாலமானவர்கள் எங்களின் டிஜிட்டல் அகப்பக்கங்களை வளம் வருகின்றார்கள். மலேசியாவில் தற்போது மிகப்பெரிய ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான 5-வது இடத்திலுள்ள நாங்கள், டிஜிட்டல் ‘எடெக்ஸ்’ 15% வளர்ச்சியைப் பதிவு செய்து 30 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியுள்ளது. மேலும் விரிவடையவும் அதிகமானோரைச் சென்றடையவும் எங்களின் பன்மொழி உள்ளடக்கங்களைக் கொண்டு டிஜிட்டல் ‘எடெக்ஸ்’ பங்குச் சந்தை வளர்ச்சியடைய செய்வதற்கு எண்ணம் கொண்டுள்ளோம்.

டிஜிட்டல் வாழ்க்கை முறையைத் துரிதப்படுத்துவதில் அஸ்ட்ரோவிற்கு ஒரு முக்கிய தூணாக விளங்குகின்றது. அமேசான் (AWS) உடனான கூட்டமைப்பு முயற்சி வாடிக்கையாளர்களின் தேவைகளை டிஜிட்டல் வாயிலாக வழங்குவதற்குத் தயாராகி கொண்டுள்ளோம். பங்குச் சந்தையில் சிறந்த சேவையும் பல புதிய விளையாட்டு தொழில்நுட்பங்களைத் துரிதப்படுத்துவோம். முக்கியமாக, பல தரப்புடன் ஒன்றிணைந்து அவர்களும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு வரவேற்போம்.

டிரைப் (Tribe), கோ ஷோப் (Go Shop) மற்றும் இஜிஜி நெட்வொர்க் (eGG Network) சேவைகள் விரிவடைந்துள்ளன

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டிரைப் ( Tribe), அதாவது ஓடிடி (OTT)  காணொளி செயலியை 1 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். அதுமட்டுமின்றி, அஸ்ட்ரோவின் இணைய வியாபாரமான ‘கோ ஷோப்’ (Go Shop) மலேசியா மற்றும் சிங்கப்பூர் என சுமார் 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இச்சேவையை வழங்கி வருகின்றது.அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டியிலே இஜிஜி (eGG) சேவை தற்போது ஐந்து நாடுகளில் கிடைக்கின்றது.

மலேசியாவிலுள்ள குடும்பங்களில் தொடர்ந்து ஊடுருவிருப்பது மட்டுமின்றி ஓடிடி (OTT), டிஜிட்டல், சமூக வளத்தளங்கள் எனப் போன்றவற்றில் டிஜிட்டல் வாழ்க்கை முறை உள்ளூர் மற்றும் வெளிநாட்டிகளில் ஏற்படுத்தி தருவதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.  இதன் வழி, ஊடகத் துறையிலும் ‘எடெக்ஸ்’ மற்றும் வியாபார பங்குச் சந்தையில் ஒருங்கிணைப்பது மட்டுமின்றி பங்குதாரர்களுக்குத் தொடர்ச்சியான வருவாயை தர முடியும். இவ்வாறு செய்வதால்  நாங்கள் தொடர்ந்து முறையாக முதலீடு செய்யவும் நிலையான வளர்ச்சியை அடைய முடியும்.

இவ்வாறு அஸ்ட்ரோ தனது பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருக்கிறது.