Home Featured இந்தியா உத்திர பிரதேசத்தில் இரயில் தடம் புரண்டது!

உத்திர பிரதேசத்தில் இரயில் தடம் புரண்டது!

684
0
SHARE
Ad

Expressலக்னோ – உத்திரபிரதேச மாநிலம் குலபாஹர் அருகே இன்று வியாழக்கிழமை அதிகாலை மஹாகோசல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில், 8 பெட்டிகள் சரிந்து விழுந்ததோடு, 10 பயணிகள் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதோடு, காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.