Home Featured நாடு மில்லேனியம் குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் அவ்வளவு எளிதல்ல: ஸ்டார் புரோடிஜி

மில்லேனியம் குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் அவ்வளவு எளிதல்ல: ஸ்டார் புரோடிஜி

1293
0
SHARE
Ad

Prodigi1கோலாலம்பூர் – 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களை “மில்லேனியல் குழந்தைகள்” என்போம். இந்த குழந்தைகளை “Y Generation” என்றும் கூறுவதுண்டு. சிந்தனை திறன், கற்றல் திறன் மற்றும் வித்தியாசமான செயல்பாடுகளைக் கொண்ட இவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் போதிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல! மில்லேனிய குழந்தைகளின்  கற்றல்  முறையை அறிந்து, அதற்கேற்ப பாடம் போதிப்பதானது பல மேலை நாடுகளில் வழக்கத்திற்கு வந்து விட்டது. பார்த்தல், கேட்டல் மற்றும் தொடுதல்  மூலம் கற்பதையே; கற்றல் முறையில் காணப்படும் முக்கிய கூறுகள் என்போம். இந்த கற்றல் முறையை மையப்படுத்தி ஆசிரியர்களுக்கும் பெற்றோற்களுக்கும் பட்டறைகளின் வழி, தெளிவாக  விளக்கமளித்து வருவதுதான்; ஸ்டார் புரோடிஜியின் தலையாய நோக்கமாகுமென, அந்நிறுவனத்தின் தோற்றுனரும் பயிற்றுனருமனான செந்தில் நாதன் தெரிவித்தார்.

Starஅவ்வகையில் அண்மையில் தலைநகரில் அமைந்துள்ள பங்சார் மற்றும் அப்பர் தமிழ்பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த கற்றல் கற்பித்தல் பட்டறை மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், அப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 30 ஆசிரியர்கள் கலந்துக்  கொண்ட வேளையில், இவ்விரு பள்ளிகளின் தலைமையாசிரியைகளான விமலா (பங்சார்) மற்றும் பிரேமா (அப்பர்) ஆகிய இருவரும் இந்நிகழ்வு செவ்வனே நிகழ்ந்திட மிக உன்னதமான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். “காலத்திற்கேற்ற மாற்றம் அனைத்து துறைகளிலும் ஊடுறுவி விட்டது. அஃது கல்வி துறையையும் நிச்சயமாக ஆட் கொண்டுதான் இருக்கின்றது”. இதில் புதியவனவற்றை வரவேற்று பழையவனவற்றை மேம்படுத்துதல் அவசியமென்பதில் இவ்விரு பெண்மணிகளும் மிக உறுதியாக இருக்கின்றனர். மாணவர்களின் கற்றல் முறை என்ன? அவற்றை அடையாளம் காணும் முறை என்ன? அடையாளம் கண்டு அவற்றை நடைமுறைபடுத்தும் வழி வகைகள் என்ன? என்ற பல வினாக்களுக்கு இங்கே விடை கொடுக்கப்பட்டதானது; இம்மூன்று மணி நேர பட்டறையில் அலுப்பில்லாமல் சுவாரஸ்யமாக தங்களால் இணைந்து கொள்ள முடிந்ததாக இவர்கள் குறிப்பிட்டனர்.

Prodigiஇதனிடையே தலைநகரின் பரபரப்பில் அமைதியாகவும் நிதானமாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன பங்சார் மற்றும் அப்பர் தமிழ்பள்ளி இரண்டும்.இங்கு மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தலில் போதிய வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. ஏனெனில், இவ்விரண்டு பள்ளிகளும் தலைநகரத்தின் மைய பகுதியில் அமைந்திருப்பதால் பெற்றோர் போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டுக் கொள்வோமோ என்ற எண்ணத்தில் இருக்கலாம்.ஆனால் இதற்கு தீர்வாகவே இவ்விரு பள்ளிகளும் பேருந்து / இரயில் போன்ற போதுமான போக்குவரத்து வசதிகள் நிரம்பிய மையப் பகுதியில் மையம் கொண்டுள்ளன. எனவே, தலைநகரில் பணி புரியும் பெற்றோர் தாராளமாக தங்கள் பிள்ளைகளை  இங்கே அனுப்பலாம்.

#TamilSchoolmychoice

ஸ்டார் புரோடிஜி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர், அஸ்ட்ரோ விழுதுகள் புகழ் கண்ணா சிம்மாதிரி கூறுகையில்; “இன்றைய ஆசிரியர்களுக்கு உகந்த ஒரு கற்றல் முறையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். இதை பாடம் நடத்தும் பட்டறையாக பார்க்காமல், கல்வி துறை சார்ந்த பொது அறிவினை பெருக்கிக் கொள்ளும் ஒரு தளமாக” ஆசிரிய பெருமக்கள் பார்க்க வேண்டுமென  கோரிக்கை விடுத்தார்.  மேலும், நாடளாவிய நிலையில் உள்ள அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் இந்த கற்றல் கற்பித்தல் பட்டறை சென்றடைய வேண்டும் . அதற்கு 012 – 560 7003 என்ற எண்ணில் அழைக்க மறக்க வேண்டாமென கண்ணா கேட்டுக் கொண்டார்!