Home Featured நாடு 3 வடகொரியர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரம் இல்லை: காலிட்

3 வடகொரியர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரம் இல்லை: காலிட்

933
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் சகோதர் கிம் ஜோங் நம் கொலை வழக்கில், தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 3 வடகொரிய நாட்டவர்களைக் கைது செய்ய போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக வடகொரிய தூதரகத்தைச் சேர்ந்த இரண்டாம் செயலாளர் ஹுயோன் வாங் சோங் (வயது 44), ஏர் கொரியோ பணியாளர் கிம் உக் இல் (வயது 37), ரி ஜி யு என்ற ஜேம்ஸ் ஆகிய மூவரும் புக்கிட் டாமன்சாராவில் உள்ள வடகொரியத் தூதரகக் கட்டிடத்தில் இத்தனை நாட்கள் பதுங்கி இருந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அவர்கள் மூவரும் வடகொரியாவிற்குச் சென்றனர்.

“அவர்களைக் கைது செய்ய நம்மிடம் போதுமான ஆதாரம் இல்லை. அவர்கள் தங்களது சொந்த நாட்டிற்குச் செல்வதற்கு முன்பாக, கொலை வழக்கில் அவர்களின் வாக்குமூலம் மட்டுமே பெறப்பட்டது” என்று காலிட் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம், ஜோங் நம் உடல் மலேசியாவில் இருந்து பெய்ஜிங் அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 மலேசியர்களும் மலேசியா திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.