இன்றோடு தனது அதிகாரபூர்வ இந்திய வருகையை நிறைவு செய்யும் நஜிப் இந்தியாவில் சென்ற இடங்களில் எல்லாம் காலை உணவாக உண்டு மகிழ்ந்தது நம்மூர் இட்லிதானாம். தான் உண்ட இட்லிகளை படம் எடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டும் மகிழ்ந்திருக்கிறார் நஜிப்.
மேலே உள்ள படம் 2 ஏப்ரல் 2017-ஆம் தேதி காலை எடுக்கப்பட்டதாகும். இதனைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நஜிப், “இன்று (ஏப்ரல் 2) எனது இந்திய நிகழ்ச்சிகள் என்ன என்பது குறித்து, பரிசீலித்துக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆண்டவன் அருளால் மலேசியாவுக்கு மேலும் கூடுதலான முதலீடுகளும் வணிகங்களும் வந்து சேரும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் படத்தில், அவரது முன்னால் பரிமாறப்பட்டிருக்கும் காலை உணவில் இட்லியும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்!
மேலே காணும் இந்த இட்லிகளின் படம் இன்று செவ்வாய்க்கிழமை ( 4 ஏப்ரல் 2017) பிரதமர் நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததாகும். “இந்தியாவில் எனக்குப் பிடித்தமான காலை உணவு இட்லி” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நஜிப்.
இந்தியப் பயணத்தின்போது நஜிப்பைக் கவர்ந்த மற்றொரு உணவு புக்காரா தண்டூரி எனப்படும் வட இந்திய உணவாகும். தான் உண்ட அந்த உணவைப் படம் எடுத்தும் நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் படத்தைக் கீழே காணலாம்:
-செல்லியல் தொகுப்பு