Home Featured கலையுலகம் தொலைக்காட்சி நடிகை நந்தினியின் கணவர் தற்கொலை!

தொலைக்காட்சி நடிகை நந்தினியின் கணவர் தற்கொலை!

706
0
SHARE
Ad

Nanthiniசென்னை – விஜய் தொலைக்காட்சியில் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா கதாப்பாத்திரத்தில் நடித்துப் பிரபலமான நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன், சென்னை விருக்கம்பாக்கத்தில் உள்ள தங்கும்விடுதி ஒன்றில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

கார்த்திகேயனுக்கும், நந்தினிக்கும் திருமணம் ஆகி 1 வருடம் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், இந்தத் தற்கொலைச் சம்பவம் சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை நடத்தி வந்த கார்த்திகேயன், அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிறைய பேரிடம் பணம் வாங்கியதாகவும், பணம் கொடுத்தவர்கள் அதைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்கவே கார்த்திகேயன் இம்முடிவை எடுத்துவிட்டதாகவும் நந்தினி ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice