புதுடில்லி – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அதிகாரபூர்வ 6 நாள் இந்திய வருகை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த வருகையின் போது பல வணிக ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
பல வணிகப் பிரமுகர்களும் நஜிப்பைச் சந்தித்து வணிக விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
இந்தியாவின் மிகப் பெரிய உயிரியல் தொழில்நுட்ப (Bio-technology) நிறுவனமான பையோகோன் நிறுவனத்தின் (Biocon Limited) தலைவரும், நிர்வாக இயக்குநரும் இந்தியாவின் முன்னணி பெண் வணிகர்களில் ஒருவருமான கிரண் ஷா பிரதமரைச் சந்தித்தார். அருகில் அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம்.
இந்திய வணிகர்களை வரவேற்று முதலீடுகள் குறித்து உரையாடும் நஜிப்…
தனது இந்திய வருகையின்போது இரவு பகல் பாராமல் செய்திகள் சேகரித்து வெளியிட்ட பத்திரிக்கையாளர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்திருக்கும் நஜிப், அவர்களுடன் நினைவுக்காக புதுடில்லியில் எடுத்துக் கொண்ட இந்தப் புகைப்படத்தைத் தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
380 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இரண்டு வணிகத் திட்டங்களுக்கான உறுதிக் கடிதங்களை டொப்வொர்த் குழுமம் (Topworth Group) சமார்த் குழுமம் (Samarth Group) ஆகிய நிறுவனங்களிடமிருந்து பிரதமர் நஜிப் பெற்றுக் கொண்டபோது…
-செல்லியல் தொகுப்பு