Home Featured கலையுலகம் சித்ரா, நரேஷ் ஐயருடன், மலேசியக் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி!

சித்ரா, நரேஷ் ஐயருடன், மலேசியக் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி!

709
0
SHARE
Ad

IRMF442017கோலாலம்பூர் – புகழ்பெற்ற பின்னணிப் பாடகி பத்மஸ்ரீ கே.எஸ்.சித்ரா, இளம் பாடகர் நரேஷ் ஐயர் ஆகியோருடன், மலேசியாவின் பிரபல பாடகர்களான சித்தார்த், சந்தேஷ் குமார் ஆகிய இருவரும் பங்கேற்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி வரும் வரும் மே 20-ம் தேதி, சனிக்கிழமை இரவு 7 மணியளவில், கேஎல்சிசி பிளனரி அரங்கில் நடைபெறவிருக்கிறது.

‘இந்தியன் ரிதமிக் மியூசிக் பெஸ்டிவல் (IRMF)’ என்ற இந்த இசை நிகழ்ச்சியை ஆராதனா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்கின்றது. இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஆராதனா நிறுவனத்தின் நிர்வாகிகளும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு, நிகழ்ச்சி குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டனர்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்ச்சி குறித்து ஆராதனா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி அர்வின் கங்காதரன் கூறுகையில், மலேசியாவில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் இசை நிகழ்ச்சியாக ஐஆர்எம்எஃப் இருக்கும் என்று தெரிவித்தார்.

IRMF442017இந்நிகழ்ச்சியில் பாடகி கே.எஸ்.சித்ராவுடன், நரேஷ் ஐயர், பிரகாஷ் உலியேறி, ரவி சாரி, யு.ராஜேஸ், நிஷாத், வேதா பிரகாஷ் மற்றும் மலேசியக் கலைஞர்கள் அஸ்ட்ரோ புகழ் சித்தார்த், சந்தேஷ் குமார் ஆகியோரும் பாடவிருப்பதாக அர்வின் தெரிவித்தார்.

சித்ராவின் பிரபலமான 90-ம் ஆண்டு பாடல்களோடு, இளைஞர்களைக் கவரும் அண்மையப் பாடல்களும் நிகழ்ச்சியில் இடம்பெறவிருப்பதாக அர்வின் குறிப்பிட்டார்.

டிக்கெட் விலை

மலேசியாவில் அனைத்துத் தரப்பினரும் இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கும் வகையில், நியாயமான விலையில், டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக அர்வின் தெரிவித்தார்.

அதன் படி, வெண்கலப் பிரிவு 99 ரிங்கிட்டும், வெள்ளி 199 ரிங்கிடும், தங்கம் 299 ரிங்கிட்டும், பிளாட்டினம் 444 ரிங்கிட்டும், முக்கியப் பிரமுகர் பிரிவு 555 ரிங்கிட்டுக்கும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மக்கள் கொடுக்கும் விலைக்கு தரமான முறையில் நிகழ்ச்சி படைக்க வேண்டும் என்பதற்காகவும், போக்குவரத்திற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கேஎல்சிசி பிளனரி அரங்கில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அர்வின் தெரிவித்தார்.

3,000 பேர் வரை தாராளமாக அமர்ந்து இனிமையாக நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் வகையில் அங்கு சகல வசதிகளும் அமைந்திருப்பதாகவும் அர்வின் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை, www.ARADHANAPRODUCTION.COM , www.buy tickets.com.my  என்ற அகப்பக்கங்களின் மூலமாகவோ அல்லது  012-307 0865,  012-619 5250 என்ற எண்களுக்கு தொலைபேசியில் அழைத்தோ டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆர்வமுள்ள ரசிகர்கள் விரைவில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

-ஃபீனிக்ஸ்தாசன்