கடந்த வாரம் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்ட போது, அவரைப் போலவே அவரது டுவிட்டர் பக்கமும் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டது.
சென்னை ராஜ்பவனில் இரவு மான்கள் உலவுவது தொடங்கி, சூப்பர் ஸ்டார் ரஜினி, மோடியுடனான தம்படம் (செல்ஃபி), பிடித்த உணவு இட்லி வரை என நஜிப்பின் டுவிட்டர் பக்கம், அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த புகைப்படங்கள், பதிவுகளால் அலங்கரிக்கப்பட்டது.
இந்நிலையில், நஜிப்பை டுவிட்டரில் பின்பற்றி வரும் ஷமீர் ஷாரி என்பவர், நஜிப்பின் புகைப்படம் ஒன்றின் கீழே, “தொப்பையைக் கொஞ்சம் மறையுங்கள்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ஷமீருக்கு நஜிப் பதில் தெரிவித்திருக்கிறார். அதில், “உடற்பயிற்சி செய்ய நேரமில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நஜிப், ஷமீரின் பதிவை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு பதிலளிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனினும், நஜிப் தான் அப்படி ஒரு பதிலளித்திருக்கிறாரா? அல்லது அவரது டுவிட்டர் உதவியாளர்கள் யாரும் அப்படி ஒரு பதிலளித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.