Home Featured நாடு ஊழல் குற்றச்சாட்டில் மஇகா முன்னாள் உதவித்தலைவர் ‘டான்ஸ்ரீ’ கைது!

ஊழல் குற்றச்சாட்டில் மஇகா முன்னாள் உதவித்தலைவர் ‘டான்ஸ்ரீ’ கைது!

1146
0
SHARE
Ad

MACCஜோகூர் பாரு – வடிகால் மற்றும் நீர்ப்பாசன துறை திட்டங்களில் லஞ்ச ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில், ‘டான்ஸ்ரீ’ பட்டம் கொண்ட முன்னாள் மஇகா தேசிய உதவித் தலைவர் ஒருவரை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் கைது செய்திருக்கிறது.

தொழிலதிபருமான ‘டான்ஸ்ரீ’-ஐ ஜோகூர் பாருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று புதன்கிழமை மாலை, எம்ஏசிசி அதிகாரிகள் கைது செய்ததாக, எம்ஏசிசி துணை ஆணையர் டத்தோ அசாம் பாக்கி ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்டிருக்கும் ‘டான்ஸ்ரீ’ ஜோகூர் பாருவைச் சேர்ந்தவர் என்பதால், மஇகா வட்டாரங்களில் தற்போது இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.