Home Featured தமிழ் நாடு சரத்குமார் வீட்டிலும் சோதனை!

சரத்குமார் வீட்டிலும் சோதனை!

1277
0
SHARE
Ad

sarathkumar

சென்னை – நேற்று வெள்ளிக்கிழமை தமிழ் நாட்டின் பல பகுதிகளில் அதிரடி சோதனை நடத்திய வருமான வரித் துறை இலாகாவினர், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் (சமக) தலைவருமான சரத்குமார் வீட்டிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு சரத்குமார் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து, அந்த ஆதரவின் பின்னணியில் பணப் பரிமாற்றம் ஏதும் நடந்திருக்குமா என்ற சந்தேகத்தின் பேரில் வருமான வரித் துறையினர் அதிரடி பரிசோதனை நடத்தியிருக்கிறார்கள் என தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

தமிழகம் எங்கும் சுமார் 55 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனைகள் நடத்தியிருக்கின்றனர்.

தனது வீட்டில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “சரத்குமாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என வருமான வரித் துறையினர் என்னிடம் கேட்டார்கள்” என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.