Home Featured கலையுலகம் தீ விபத்து: 3 மாடியிலிருந்து கீழே இறங்கி உயிர் தப்பிய கமல்ஹாசன்!

தீ விபத்து: 3 மாடியிலிருந்து கீழே இறங்கி உயிர் தப்பிய கமல்ஹாசன்!

827
0
SHARE
Ad

kamal1சென்னை – ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் அதிருஷ்டவசமாக காயங்களின்றி கமல் உயிர் தப்பினார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் தனது உதவியாளர்களுக்கு நன்றி கூறும் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “என்னுடைய உதவியாளர்களுக்கு நன்றி. என்னுடைய வீட்டில் நடந்த தீ விபத்தில் இருந்து தப்பினேன். நுரையீரல் முழுவதும் புகை, 3 மாடியிலிருந்து கீழே இறங்கினேன். நான் பாதுகாப்பாக இருக்கிறேன். யாரும் காயமடையவில்லை. நல் இரவு” என்று கமல் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice