Home Featured கலையுலகம் 7-வது முறையாக தேசிய விருது – கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி!

7-வது முறையாக தேசிய விருது – கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி!

1036
0
SHARE
Ad

vairamuthu_2007064gசென்னை – நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 64-வது தேசிய விருதுகளின் படி, கடந்த ஆண்டு, சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘எந்தப் பக்கம்’ என்ற பாடலை எழுதியதற்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தேசிய விருது  கிடைத்திருக்கிறது.

இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு அவ்விருதுகளை அறிவித்தது.

இந்நிலையில், 7-வது முறையாக தேசிய விருதைப் பெறும் கவிஞர் வைரமுத்து, தமிழுக்குக் கிடைத்த பெருமை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice