Home Featured நாடு 2013-ம் ஆண்டே இஸ்லாத்துக்கு மாறிவிட்டாரா கீதாஞ்சலி ஜி?

2013-ம் ஆண்டே இஸ்லாத்துக்கு மாறிவிட்டாரா கீதாஞ்சலி ஜி?

1130
0
SHARE
Ad

Dato G islamகோலாலம்பூர் – டத்தோ கீதாஞ்சலியும், அவரது கணவர் டத்தோ ஞானராஜாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல் ஒன்று பேஸ்புக், வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது.

அதற்கு ஏற்ப வாட்சாப்பில் பரவிய காணொளி ஒன்றில், இஸ்லாம் மதபோதகர் போல் தோற்றமளிக்கும் ஒருவர், கீதாஞ்சலி ஜி-க்கு சில சடங்குகளைச் சொல்லித் தருகிறார்.

முகத்தில் ஒருவித அச்சத்துடன் கீதாஞ்சலி ஜி அதனைப் பின்பற்றுகிறார். அதோடு, அங்கு அந்தக் காணொளியைப் படம் பிடித்துக் கொண்டிருப்பவரிடம், படம் பிடிக்க வேண்டாம் என்பது போல் கீதாஞ்சலி ஜி சைகையில் சொல்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இன்னொரு காணொளி ஒன்றில், மற்றொரு நபருக்கு அதே மதபோகர் போல் தோற்றம் கொண்டவர், சில சடங்குகளைச் சொல்லித் தருகிறார். அது கீதாஞ்சலி ஜி-யின் கணவர் என்று அந்தக் காணொளி உடன் வந்த தகவல் கூறுகின்றது. ஆனால் அது கீதாஞ்சலி ஜி-யின் கணவர்தானா? என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இது குறித்து கீதாஞ்சலி தரப்பில் இருந்தும் இதுவரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை.

இதனிடையே, நாடாளுமன்ற மேலவைத் தலைவரின் பத்திரிகைச் செயலாளர் டத்தோ ஆர்.ரமணன், நேற்று வெள்ளிக்கிழமை, தலைநகர் டைனஸ்டி தங்கும்விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக சிலத் தகவல்களை அளித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் தகவல்:-

“கடந்த 2013-ம் ஆண்டிலேயே டத்தோ கீதாஞ்சலி தம்பதியர் இஸ்லாம் மத்திற்கு மாறிவிட்டனர். ஆனால் அதை அவர்கள் மறைத்துவிட்டு, இத்தனை நாட்களாக ஒட்டுமொத்த சமயத்தையும் இழிவு படுத்தி வருகின்றனர். தங்களது நிறுவனத்தில் பலரையும் முதலீடு செய்யச் சொல்லி ஏமாற்றிவிட்டு, பிரதமரையும், அவரது துணைவியார் பெயரையும் பயன்படுத்துவது சரிதானா? இதனை காவல்துறை தான் விசாரணை செய்ய வேண்டும். இது தொடர்பாக நாளை (இன்று சனிக்கிழமை) டாங் வாங்கி காவல்நிலையத்தில் டத்தோ கீதாஞ்சலி மற்றும் அவரது கணவர் டத்தோ ஞானராஜா ஆகியோர் மீது புகார் அளிக்கவிருக்கிறேன்” என்று டத்தோ ஆர்.ரமணன் கூறியிருக்கிறார்.

மேலும், இச்சந்திப்பின் போது கீதாஞ்சலியால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று சிலரையும் அழைத்து வந்திருந்த ரமணன் அவர்களை செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்திருக்கிறார்.