Home Featured உலகம் கார் மோதி செல்ல நாய் மரணம்: வாகனங்களைத் தீ வைத்து எரித்த பெண்!

கார் மோதி செல்ல நாய் மரணம்: வாகனங்களைத் தீ வைத்து எரித்த பெண்!

752
0
SHARE
Ad

Chinaarsonattackபெய்ஜிங் – தனது செல்ல நாயை கார் ஒன்று மோதி கொன்றதையடுத்து, வாகனங்கள் பலவற்றிற்குத் தொடர்ந்து தீ வைத்துக் கொளுத்தி வந்த சீனப் பெண்ணை, அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் என்ற பகுதியில், தொடர்ச்சியாக கார்கள், வேன்கள், மின் மோட்டார் சைக்கிள்கள் என வாகனங்கள் பல தீப்பற்றி எரியத் தொடங்கின.

இந்நிலையில், அப்பகுதிவாசிகள் பலரும் இது குறித்து காவல்துறையிடம் புகார் செய்தனர்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாகனங்களுக்குத் தீ வைத்தது ஒரு பெண் என்பது தெரியவந்தது.

அவரைக் கைது செய்து காவல்துறை விசாரணை செய்த போது, அவரது செல்ல நாய் ஒன்று காரில் அடிபட்டு மரணமடைந்தது தெரியவந்திருக்கிறது.