Home Featured தொழில் நுட்பம் சீனாவின் மெய்சு நிறுவனத்தின் இரு திறன்பேசிகள் மலேசியாவில் அறிமுகம்!

சீனாவின் மெய்சு நிறுவனத்தின் இரு திறன்பேசிகள் மலேசியாவில் அறிமுகம்!

1273
0
SHARE
Ad

Meizuகோலாலம்பூர் – திறன்பேசி சந்தையில் சீனாவின் மிகப் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான மெய்சு, மலேசியாவில் தனது இரு அண்டிராய்டு திறன்பேசிகளைப் புதிதாக அறிமுகம் செய்திருக்கின்றது.

புரோ 6 பிளஸ், எம்5 நோட் ஆகிய இரண்டு இரக திறன்பேசிகளும், முறையே, 1,999 ரிங்கிட் மற்றும் 849 ரிங்கிட்டில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Meizu1மெய்சு டெக்னாலஜி நிறுவனத்தின் ஆசியா பசிபிக் இயக்குநர் கேரி சு கூறுகையில், மலேசியாவில் நிறைய வாடிக்கையாளர்கள் அதிகமாகத் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதாலும், குறைந்தது இரண்டு திறன்பேசிகளை உபயோகிப்பதாலும், தமது நிறுவனம் மலேசியாவில் கால் பதித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice