Home Featured கலையுலகம் “பழைய படி இட்லி கடை தான்” – மேடையில் கஞ்சா கருப்புவைத் திட்டிய பாலா!

“பழைய படி இட்லி கடை தான்” – மேடையில் கஞ்சா கருப்புவைத் திட்டிய பாலா!

976
0
SHARE
Ad

சென்னை – சமுத்திரக்கனி இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள ‘தொண்டன்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, அண்மையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் பாலா பேசுகையில், சமுதிரக்கனி குறித்தும், ‘தொண்டன்’ குறித்தும் மிகவும் புகழ்ந்து பேசினார்.

மேலும், நடிகர் விக்ராந்த் மிகச் சிறந்த நடிகராக இன்னும் இரண்டு ஆண்டுகளில் வருவார் என்றும் பாலா ஆரூடம் கூறினார்.

#TamilSchoolmychoice

அடுத்ததாக, கஞ்சா கருப்பு குறித்து பேசுகையில், “கஞ்சா கருப்பு.. அடி முட்டாப்பய.. உனக்கெல்லாம் தயாரிப்பு பத்தி என்ன தெரியும்? சம்பாரிச்ச காசெல்லாம் விட்டுட்டியா? பழைய படி இட்லி கடை தான போட்டிருக்க. அப்படி இருந்தும் உனக்கு இந்தப் படத்துல வாய்ப்பு கொடுத்திருக்கான். பயன்படுத்திக்க” என்று இசை வெளியீட்டு விழா மேடையிலேயே தெரிவித்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு, ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்த கஞ்சா கருப்பு அப்படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலில் நஷ்டமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.