Home Featured நாடு ஃபோரெக்ஸ் மோசடி: ‘டத்தோ’ தம்பதிக்கு எதிராக 3 விசாரணை அறிக்கைகள்!

ஃபோரெக்ஸ் மோசடி: ‘டத்தோ’ தம்பதிக்கு எதிராக 3 விசாரணை அறிக்கைகள்!

840
0
SHARE
Ad

Malaysian Policeகோலாலம்பூர் – ஃபோரெக்ஸ் முதலீடு திட்ட மோசடியில் தொடர்படையதாகச் சந்தேகிக்கப்படும் 8 பேருக்கு எதிராக, மலேசியக் காவல்துறை 3 விசாரணை அறிக்கைகளைத் துவக்கியிருக்கிறது.

பேங்க் நெகாரா மலேசியாவிற்கு அந்த விசாரணை அறிக்கைகள் அனுப்பப்பட்டு தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருவதாக புக்கிட் அம்மான் வர்த்தகக் குற்ற விசாரணைத்துறையின் இயக்குநர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்திருக்கிறார்.

விசாரணை முடிந்து அறிக்கைகள், அரசாங்க துணை வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அக்ரில் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த மோசடிக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்படும் தம்பதி மீது இன்னும் பெரிய அளவில் விசாரணைகள் நடத்தப்படவிருப்பதாகவும் அக்ரில் தெரிவித்திருக்கிறார்.

ஃபோரெக்ஸ் முதலீட்டு மோசடியில், 23,259 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மொத்தம் 80 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை கூறுகின்றது.

இந்நிலையில், இதுவரை மொத்தம் 408 பேர் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.