புதுடெல்லி – இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்திற்கு, இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், டெல்லி காவல்துறையில் இன்று திங்கட்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, டெல்லியில் 1.30 கோடி ரூபாய் பணத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் சுந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் டெல்லி காவல்துறை நடத்திய விசாரணையில் தேர்தல் ஆணையத்திற்கு, 60 கோடி ரூபாய் வரையில் லஞ்சம் கொடுப்பதற்காகத் தன்னிடம் 1.30 கோடி ரூபாயை தினகரன் கொடுத்தனுப்பியதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில், சுரேஷ் சுந்தர் என்பவர் யாரென்றே தனக்குத் தெரியாது என்றும், தன் மீதான வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அதிமுக-வை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் தினகரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.