Home Featured வணிகம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு!

965
0
SHARE
Ad

Petrol Pumpsகோலாலம்பூர் – இவ்வார எண்ணெய் விலையின் படி, பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரோன் 95 இரக பெட்ரோல் விலை, 2.24 ரிங்கிட்டிலிருந்து 3 காசுகள் உயர்ந்து லிட்டர் 2.27 ரிங்கிட் ஆகவும், ரோன் 97 இரக பெட்ரோல் விலை 2.52 ரிங்கிட்டிலிருந்து 2 காசுகள் உயர்ந்து லிட்டர் 2.54 ரிங்கிட் ஆகவும், டீசல் 2.16 ரிங்கிட்டிலிருந்து 5 காசுகள் உயர்ந்து லிட்டர் 2.21 ரிங்கிட் ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இன்று நள்ளிரவு முதல் இந்தப் புதிய விலை அமலுக்கு வருகின்றது. அடுத்ததாக வரும் ஏப்ரல் 26-ம் தேதி அடுத்த வாரத்திற்கான விலை அறிவிக்கப்படும்.

#TamilSchoolmychoice

ஏப்ரல் தொடங்கி இனி வாரந்தோறும் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படும் என கடந்த மாதம் உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.