Home Featured நாடு அபு சயாஃப்பின் முக்கியத் தலைவன் அல் ஹாப்சி கொல்லப்பட்டான்!

அபு சயாஃப்பின் முக்கியத் தலைவன் அல் ஹாப்சி கொல்லப்பட்டான்!

1060
0
SHARE
Ad

AlHabsiabusayafகோத்தா கினபாலு – மலேசியாவால் தேடப்பட்டு வந்த அதிபயங்கர தீவிரவாதியான அபு சயாஃப் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவனான அல் ஹாப்சி மிசாயா, பிலிப்பைன்ஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

சபா கிழக்குக் கடற்கரைப் பகுதியில், பல்வேறு கடத்தல்களைச் செய்தவனான அல் ஹாப்சி, ஜோலோவின் இண்டானான் என்ற இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டான்.

நேற்று வெள்ளிக்கிழமை, இரவு 9.35 மணியளவில் அல் ஹாப்சியை தாங்கள் வீழ்த்தியதாக பிலிப்பைன்ஸ் படை உறுதிப்படுத்தியிருக்கிறது.