Home Featured நாடு ஜிம்மில் உடற்பயிற்சியைத் தொடங்கிய பிரதமர் நஜிப்!

ஜிம்மில் உடற்பயிற்சியைத் தொடங்கிய பிரதமர் நஜிப்!

847
0
SHARE
Ad

Najibworkoutகோலாலம்பூர் – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது பரபரப்பான நாளைத் தொடங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று சனிக்கிழமை இது குறித்துத் தனது பேஸ்புக் பக்கத்தில், தான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதாக புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த மாதம் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில், நஜிப் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம் ஒன்றில், நஜிப்பின் தொப்பையை மலேசியர் ஒருவர் கிண்டலடித்திருந்தார்.

அதற்கு மிகவும் அமைதியாக பதிலளித்திருந்த நஜிப், தனது அன்றாட அவசரப் பணிகளில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.