ஜோகூர் பாரு – கோத்தா திங்கியில் உள்ள சமயப்பள்ளியில் படித்து வந்த 11 வயது மாணவர் மொகமட் தாகிவ் அமினைச் சித்திரவதைப்படுத்தி, அவர் மரணமடையக் காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அப்பள்ளியின் உதவி பாதுகாவலர் (வார்டன்) வரும் மே 3-ம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படவிருக்கிறார்.
இது குறித்து ஜோகூர் குற்றப்புலனாய்வுத்துறையின் தலைமை மூத்த உதவி ஆணையர் டத்தோ கமாருல்சமான் மாமட் கூறுகையில், “29 வயதான அந்த சந்தேகநபர், ஏப்ரல் 27-ம் தேதி வரையில் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்” என்று தெரிவித்தார்.
மேலும், இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-ல் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கமாருல்சமான் குறிப்பிட்டார்.