Home Featured நாடு 3 நாள் முகாம் : பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் மஇகா தலைவர்கள்!

3 நாள் முகாம் : பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் மஇகா தலைவர்கள்!

878
0
SHARE
Ad

subra-mic-retreat-29042017 (1)

சுங்கைப்பட்டாணி -இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் 3 நாள் வியூகப் பயிற்சிப் பட்டறை முகாமில் கலந்து கொள்ளும் மஇகாவின் தொகுதித் தலைவர்கள் மற்றும் மாநில, தேசிய நிலைத் தலைவர்கள், அடுத்த 14-வது பொதுத் தேர்தலை நோக்கித் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் விதத்திலும், அதற்கேற்ற முன்னேற்பாடுகள் குறித்த சிந்தனைகளோடும், விவாதங்களில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று சனிக்கிழமை பிற்பகலில் இந்த வியூகப் பயிற்சிப் பட்டறையை மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தொடக்கி வைத்தார்.

#TamilSchoolmychoice

3 நாட்கள் நடைபெறும் இந்த வியூகப் பட்டறையில் கட்சித் தலைவர்களோடு வியூகத் திறன் கொண்ட பல்கலைக் கழக பேராசிரியர்களும், நிபுணர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவர்.

நாளை நிறைவு பெறும் இந்த முகாம் மஇகா தொகுதி நிலைத் தலைவர்களுக்கு உத்வேகத்தையும், சிந்தனை மாற்றங்களையும், பொதுத் தேர்தலை எதிர்நோக்கும் வியூகத் திறன்களையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

subra-mic-retreat-29042017 (3)குத்து விளக்கேற்றி பட்டறையைத் தொடக்கி வைக்கிறார் சுப்ரா – அருகில் ஜஸ்பால் சிங், வி.எஸ்.மோகன், எம்.சரவணன்…

subra-mic-retreat-29042017 (6)வியூகப் பட்டறையின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மஇகா தலைவர்கள்…

படங்கள்: நன்றி – drsubra.com