Home Featured இந்தியா மலேசியாவிடமிருந்து உரங்களை வாங்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியா அனுமதி!

மலேசியாவிடமிருந்து உரங்களை வாங்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியா அனுமதி!

833
0
SHARE
Ad

najib-india visit-modi-waving

புதுடெல்லி – மலேசியாவிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்யும் இருதரப்பு ஒப்பந்தத்தை இந்திய அமைச்சு ஏற்றுக் கொண்டது.

அண்மையில் தனது அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்ற பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

#TamilSchoolmychoice

விவசாயத்திற்குத் தேவையான யூரியா மற்றும் அம்மோனியா ஆகிய உரங்களை மலேசிய நிறுவனங்களான (Malaysian consortium of Isomeric Holding Sdn Bhd, Edra Power Holdings Sdn Bhd) ஆகியவற்றிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்வது என்பது தான் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கம்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை இந்திய அமைச்சரவையில் அந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் படி, ஆண்டுக்கு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில், 2.4 மில்லியன் டன்கள் யூரியா மற்றும் 1.35 மில்லியன் டன்கள் அம்மோனிய ஆகியவை உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.