Home Featured உலகம் ஹாங் காங்கைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஹாங் காங்கைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

822
0
SHARE
Ad

Hong kongஹாங் காங் – ஐஎஸ் இயக்கத்தினரால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகள், ஹாங் காங் நகருக்குள் புகுந்திருப்பதாகவும், நகரின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் நம்பப்படுவதால், அங்கு உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

உளவுத்துறையினரின் மூலம் தீவிரவாதிகள் திட்டம் ஹாங் காங் போலீசாருக்குத் தெரியவந்ததையடுத்து, நகர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனினும் அச்சுறுத்தலின் அளவு மிதமாகத் தான் இருக்கிறது என்றும், பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்றும் ஹாங் காங் காவல்துறை அறிவித்திருக்கிறது.