Home Featured நாடு ‘கேங் 35’ தொடர்பில் மேலும் 4 மாணவர்கள் கைது!

‘கேங் 35’ தொடர்பில் மேலும் 4 மாணவர்கள் கைது!

750
0
SHARE
Ad

arrest-440-x-215அலோர் செடார் – கேங் 35 -ல் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 4 மாணவர்களை, சுங்கை பட்டாணியில் காவல்துறை கைது செய்திருக்கிறது.

இக்குண்டர் கும்பல் தொடர்பில் இதுவரை மொத்தம் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் 15 வயதிலிருந்து 17 வயதிற்குட்பட்டவர்கள் என்று கோல மூடா மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் மொகமட் ஜூகிர் மொகமட் இஷா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், அந்த நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் மொகமட் ஜூகிர் தெரிவித்தார்.